தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழா!தமிழா!ஒன்றுபடு தாயகவிடுதலையை வென்றுவிடு

Thursday 18 March 2010

வீழ்ச்சிகாணும் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தை நிராகரித்து! வளர்ச்சி பெறும் நங்கூரத்திற்கு வாக்களிப்பீர்!

-தர்மலிங்கம் சிவரூபன்

வன்னி தேர்தல் களத்தில் தமிழ்கூட்டமைப்பு ஆட்டம்காண தொடங்கியுள்ளது. புலிகளின் ஆதரவுடன் கடந்த தடவை பாராளுமன்றத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர். புலிகளின் அழிவுக்கு பின்னரும் தமிழ்தேசியம், தன்னாட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்கு வன்னியில் பலத்த எதிர்ப்பு கிழம்பியுள்ளது.

வன்னியில் கோர யுத்தத்தை வன்னி மண் எதிர்கொண்டபோது இந்த தமிழ் தேசியவாதிகள் எங்கிருந்தார்கள்? அன்று முகவரி தெரியாமல் ஒடி ஒழிந்து கொண்டவர்கள் இன்று பாராளுமன்ற கதிரைக்காக எம்மிடம் நாடி வருகின்றனர் இவர்களுக்கு இதுதான் சிறந்த பாடம் கற்பிக்க தகுந்த தரணம். தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான தமது எதிர்ப்பையும் வன்னிவாழ் மக்கள் வெளிப்படுத்தி வருவதை காணமுடிகின்றது.

இதேவேளை வன்னியில் புளொட் இயக்கத்தின் “நங்கூரம்” சின்னத்திற்கான ஆதரவு அதிகரித்துள்ளதுடன், மக்களும் தமது ஆதரவினை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி வருகின்றனர். வன்னியின் ஒவ்வொரு கிராமத்தையும் முத்தமிட்டு அவ் மக்களின் தேவைகளை அறிந்து வருவதுடன், அதற்கான உதவிகள் சிலவற்றையும் சிறியளவில் அந்த மக்களுக்கு புளொட் இயக்கத்தினர் செய்துவருவதால் மக்கள் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளதுடன், கூட்டமைப்பு போன்று போலி வாக்குறுதிகளை கூறாமல், நடைமுறைக்கு உகந்தவற்றையும், தம்மால் செய்யக்கூடியவற்றையும் செய்து கொடுக்கின்றமையால் அவர்களுக்கான ஆதரவு வலுப்பெற்று வருவதுடன், வன்னியில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு வவுனியா நோக்கி வந்தபோது தமக்கு புளொட் இயக்கத்தினர் வழங்கிய உதவிகளை மக்கள் நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றனர் இது கூட நல்ல விடயம்தான்.

இவ்வாறானவர்கள் பாராளுன்றம் செல்வதால்தான் நமது உரிமைகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்யமுடியும் என்றும், இவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோதுதான் பாவற்குளம், தாலிக்குளம் பிரதேசத்தின் பகுதிகளுக்கு மின்சாரம், பாடசாலை வசதிகள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள் எல்லாம் ஏற்படுத்தி தரப்பட்டது. அதன் பின்னர் வன்னிக்கு என எம்மால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எமது தேவைகளை நிவர்த்தி செய்யவும் இல்லை. எம்மை வந்து எமது வேதனைகளை அறிந்து கொள்ளவுமில்லை. இவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்வதை விட எமது நலன்களுக்காக தம்மையே அர்ப்பணித்து செயற்படும் புளொட் இயக்கத்தினரும் அந்த இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் ஜயா போன்றவர்கள் பாராளுமன்றம் செல்வதுமே வன்னி வளம்பெற உதவும்.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் வன்னிமக்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை சிதறடிக்காமல் புளொட் இயக்கத்தினரின் “நங்கூரம்” சின்னத்திற்கு இட்டு எமது உரிமைகளையும், தேவைகளையும், நிவர்த்தி செய்யமுடியும் என்பதில் மக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். எமது ஒவ்வொரு வாக்குமே எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும், ஆகவே போடப்போகும் எமது வாக்குகளை எம்மை பாதுகாக்க கூடியவர்களுக்கு போடுவதன் மூலமே அழிந்து போன எமது வன்னி மண்ணின் வாழ்வினை மேம்படுத்த முடியும்.

22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) செய்யமுடியாத விடயங்களை 3 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த புளொட் இயக்கத்தினரின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) கடந்த காலங்களில் திறம்பட வன்னியில் செய்து காட்டியுள்ளது. வவுனியாவின் இரு மாடி வைத்தியசாலையாக இருக்கட்டும், திறந்தவெளி பல்கலைக்கழகமாக இருக்கட்டும், வீதிகளாக இருக்கட்டும், விளையாட்டு மைதானங்கள் ஆக இருக்கட்டும், நூல் நிலையங்களாக இருக்கட்டும் இவை அனைத்தையும் சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரே எமது வன்னி மண்ணில் நிலை நிறுத்தியவர்கள்.

செயலற்று கிடந்த வவுனியா நகரசபையை சிறந்த நகரயாக்கியவர் எமது வன்னிமண் தந்த எமது லிங்கன் அண்ணர் அவர்கள், அவருடன் அப்போது கூடவே கைகோர்த்து வன்னியை வளம்படுத்தியவர்களில் வசந்தன் அண்ணர், அண்ணன் பாலச்சந்திரன் போன்ற பல புளொட் உறுப்பினர்களின் அளப்பரிய சேவை அடங்கும்.

இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகள் மிகவும் எழிமையான தோற்றத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் ஜயா அவர்கள் தனது தொகுதி ஊடாக மக்களுக்கு செய்த பணிகளைதான் இன்று அவரது தனயன் சித்தார்த்தன் அவர்களும் புளொட் தலைவராகவும் பாராளுமன்ற உடுப்பினராகவும் இருந்து வன்னிமண்ணுக்கு செய்த சேவைகள் கணக்கிலடங்காதவை. ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அவரையும் அவரது கட்சியினரையும் பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமே வன்னிமண் இழந்துபோன வளங்களை மீளப்பெற உதவும். கடந்த வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தவறானவர்களை தெரிவு செய்ததன் பலனை வவுனியா நகர் அனுபவிக்கின்றது. லிங்கன் அண்ணனை நகரபிதா ஆக்கியிருந்தால் இன்று வவுனியா நகர் மீளவும் பல சாதனைகளை கண்டிருக்கும்.

தவறானவர்களை தெரிவு செய்ததன் விளைவு, வவுனியா நகர் எந்தவொரு அபிவிருத்தியையும் காணமல் நகரசபை நிர்வாகம் இருக்கின்றதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது என்று கூறி “நங்கூரம்” சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் கடந்த காலங்களில் பெற்ற அபிவிருத்திகளையும், இழந்தவற்றையும் மீள்பெற உதவும் என்று கூறி எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கடந்த முறை விட்ட தவறுகளையே மீளவும் விடமாமல் நன்கு சிந்தித்து “நங்கூரம்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வன்னிமண்ணின் மைந்தன் என்ற முறையில் வன்னிவாழ் மக்களை கேட்டு கொள்கின்றேன்.

தர்மலிங்கம் சிவரூபன்
செட்டிக்குளம்
வவுனியா